மயிலாடுதுறை நகராட்சி அதிமுக பெண் வேட்பாளர் மரணம்!

மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி அன்னதாட்சி(வயது 64). இவர், மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு உறுப்பினர் பதவிக்காக அ.தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

நேற்று காலை வரை அன்னதாட்சி அ.தி.மு.க. தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார். தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று காலை அன்னதாட்சி உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்துள்ளார்.

மதியம் உணவு அருந்திய அவர் சின்னமாரியம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டார். பூஜையில் அன்னதாட்சி இருந்தபோது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அக்கம பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் அன்னதாட்சி திடீர் என்று மரணம் அடைந்ததால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அ.தி.மு.க.வினரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page