3rd December 2021

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சங்க லாப பங்கீட்டு ஈவுத்தொகை வழங்கும் விழா

 மயிலாடுதுறை திருவிழந்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. சங்க தலைவர் க.துரை தலைமை வகித்தார். இயக்குனர்கள் சித்ரா, வசந்தி முன்னிலை வகித்தனர். இயக்குனர் வை.மணிமாறன் வரவேற்புரையாற்றினார். செயலர் சக்திவேல் அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் ஆசிரியர்களுக்கு லாப பங்கீட்டு தொகையுடன் பரிசுப் பொருளையும் வழங்கி பேசுகையில், இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து லாபகரமாக இயங்கி வருவது பாராட்டுக்குரியது. சில இடங்களில் கூட்டுறவு சங்கங்களில் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக தவறுகள் நடந்து அவை பத்திரிகைகளில் வருவதையும் நாம் பார்க்கிறோம். நீங்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் பெருமளவு நிதி வழங்கி உள்ளீர்கள். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்வித்துறையில் முதல்வர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். உங்கள் கோரிக்கைகளையெல்லாம் நிச்சயம் நிறைவேற்றித் தருவார். நாங்கள் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம். நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அரசு வழிகாட்டுதல்படி மிக கவனமாக மாணவர்களை கையாண்டு பள்ளிகளை சிறப்பாக நடத்துங்கள் என்று பேசினார். விழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், ஆசிரியர் மன்ற மாநில வெளியீட்டு செயலாளர் ஜெ.மணிவாசகம், சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், சீர்காழி குருஞானசம்பந்தர் உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செயலாளர் வைதீஸ்வரன் கோயில் சாமிநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் வடவீரபாண்டியன், இயக்குனர்கள் காசிவிசுவநாதன், பழனிவேல், தலைமையாசிரியர் முருகையன் மற்றும் பலர் பேசினர். மயிலாடுதுறைரோட்டரி சங்கத்தின் சார்பாக அனைத்து பள்ளிகளுக்கும் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது நிறைவில் இயக்குனர் இரா.சுரேஷ் நன்றி உரையாற்றினார்.

More News

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

You cannot copy content of this page