20th September 2021

மயிலாடுதுறையில் முப்பெரும் விழா

மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்கம், ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் மயிலாடுதுறை மற்றும் லதா பதிப்பகத்தின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா, ஊடகவேதம் குறும்படம் வெளியிட்டு விழா, எழுத்தாளர் பா. அய்யாசாமியின் “சுண்ட தோண்டிகள்” சிறுகதை நூல் வெளியிட்டு விழா என முப்பெரும் விழா சிறப்பாக மயிலாடுதுறை ஜெயின் அரங்கில் நடந்தது.

விழாவிற்கு மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் க. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நூல் மற்றும் குறும்படத்தினை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் எம். என். ரவிச்சந்திரன் வெளியிட்டார். மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெனிபர் ச. பவுல்ராஜ், சிறப்புத் தலைவர் சு. சிவலிங்கம், ஆர். எஸ். கிருஷ்ணா அண்டு கோ எஸ். வி. பாண்டுரங்கன் ஆகியோர் முதல் பிரதிகளை பெற்றுக் கொண்டார்கள். மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவையின் தலைவர் சி. சிவசங்கரன் நூலினை திறனுரை செய்தார். பூம்புகார் கலைக் கல்லூரி துணைப் பேராசிரியர் து. சந்தானலட்சுமி சிறப்புரை ஆற்றினார். மயிலாடுதுறை ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் தலைவர் பாண்டுரங்கன் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்கு போற்றி புகழுரை நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சிகளை சிவராமன்சரண் தொகுத்து வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்கம், திருக்குறள் பேரவை மற்றும் தமிழ் அமைப்பினை சேர்ந்தவர்களும், தமிழ் ஆர்வலர்களும் திரளாக கலந்துகொண்டார்கள். வணிகர் சங்கங்களின் மாவட்ட பொருளாளர் இரா. ஜெயக்குமார் வரவேற்றார். நூலாசிரியர் பா. அய்யாசாமி நன்றி கூறினார்.

 

Leave a Reply

You cannot copy content of this page