8th December 2021

மயிலாடுதுறை: ரூ.1 கோடி மதிப்பு விசைப்படகுகள் பறிமுதல்!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடந்த 14ம் தேதி வானகிரி – திருமுல்லைவாசல் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விபத்தை ஏற்படுத்திய விசைப்படகு மற்றும் சுருக்குமடி வலைகள் பறிமுதல்.400க்கும் மேற்பட்ட போலிசார் திருமுல்லைவாசலில் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் இல்லையென்றால் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு,சந்திரபாடி உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப் பிரிவு போலீஸார் தடைகளை மீறி மீன்பிடித்து வரும் படகுகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.அதனைத் தொடர்ந்து சரியான முறையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என ஆத்திரமடைந்த பூம்புகார் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுருக்கு மடி வலை ஆதரவு மீனவர்கள் கடந்த 14 ஆம் தேதி அன்று தங்களது விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதனை அறிந்த தரங்கம்பாடி, வாணகிரி மீனவர்கள் அவர்களை தடுப்பதற்கு தங்களது பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்றனர்.அப்போது திருமுல்லைவாசல் மீனவர்கள் விசை படகு பைபர் படகின் மீது மோதிய விபத்தில் வானகிரி மீன கிராமத்தைச் சார்ந்த ராம்குமார், வினோத், சிலம்பரசன் உள்ளிட்ட 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். பூம்புகார் மீனவர்களுக்கு சொந்தமான நான்கு பைபர் படகுகளுக்கு தீ வைக்கபட்டது.இது தொடர்பாக கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்து 4பேரை கைது செய்தனர். தொடர்ந்து இரு தரப்பு மீனவ கிராமங்களிலும் விசாரணை நடைபெற்று வரும் சூழலில் படகுகள் மோதலுக்கு காரணமான விசைப்படகை பறிமுதல் செய்ய திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.தொடர்ந்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள், பாலமுருகன், ரமேஷ் கிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் லாமேக் மற்றும் வருவாய்த்துறையினர், மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல்படையினர் இணைந்து மோதலுக்கு காரணமான விசைப்படகு மற்றும் தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ரூபாய் 1 கோடி மதிப்பிலான விசை படகு மற்றும் ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான சுருக்குமடி வலையை பறிமுதல் செய்தனர்.

Advertisement

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page