26th October 2021

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரூரல் பகுதியில் கொரோன தடுப்பு நடவடிக்கை

கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரூரல் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைத்து அப்பகுதி சாலைகள் முழுதும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். மேலும் அப்பகுதி முழுதும் கொரோனாவில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

Leave a Reply

You cannot copy content of this page