மயிலாடுதுறை மற்றும் சீர்காழி வட்ட கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி வட்ட கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை வட்டம் பட்டமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார், மேலும் மருத்துவர்களிடம் தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாகவரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திடுமாறும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்திடுமாறும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சீர்காழி வட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினையும், திருவெண்காடு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடுப்பூசி செலுத்திக்கொள்ளவரும் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலின்றி தடுப்பூசி செலுத்திடுமாறு மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அவர்கள் உடனிருந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கொரோனா தடுப்பு நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்றையதினம் மயிலாடுதுறை வட்டம் பட்டமங்கலம், சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிடப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர்.


பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் போன்றவைகளை தொடர்ந்து பின்பற்றிட வேண்டும். குறிப்பாக வீட்டைவிட்டு தேவையின்றி வெளியில்வருவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாதா இ.கா.ப., வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜமோகன், மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்ஸ்வ, சீர்காழி வட்டாட்சியர் ஹரிதரன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page