3rd December 2021

மயிலாடுதுறை சிவப்பிரியா நகர் ஞான விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி, சிவப்பிரியா நகரில் அமைந்துள்ள ஞான விநாயகர் திருக்கோவில் திருப்பணிகள் மகா மண்டபம் அமைக்கப்பட்டு, ஞான விநாயகர் தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா திருவுருவச் சிலைகள், துவார பூதங்கள், ரிஷபங்கள் புதிதாக அமைக்கப்பட்டு பஞ்ச வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டது.

திருக்கோவிலின் உள் வெளி சுற்றுப் பிரகாரங்கள், அமைக்கப்பட்டன. திருப்பணி நிறைவு பெற்று மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக அனுக்ஜை பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்வாங்க பூஜைகள், மற்றும், ரக்ஷா பந்தனம், லட்சுமி பூஜை, இரண்டு கால யாக பூஜைகள் ஜபம், ஹோமம், அரசு வேம்பு கும்பாபிஷேகம், ஆச்சார்யா எஜமானர் உற்சவம், உட்பட அனைத்து பூஜைகளும் சிறப்புடன் நடைபெற்று மூலவர் ஞானவிநாயகர் விமான கும்பாபிஷேகம் பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், சிவப்பிரியா நகர் நல மன்றத்தின் செயலாளர் பாலசுப்ரமணியன், நிர்வாகிகள் மோகன்ராஜ், அ.அப்பர்சுந்தரம், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், குமார், பாலசுப்பிரமணியன், குருமூர்த்தி, ராஜீ, வள்ளாலகரம் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா, வார்டு உறுப்பினர் பால்ராஜ் உள்பட பெண்கள் உள்பட பெருந்திரளான பக்தர்கள் பலர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை சீர்காழி ஞான கார்த்திகேயன் சிவாச்சாரியர், ஆனதாண்டவபுரம் கௌரிசங்கர் சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைத்தார்கள். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

More News

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

You cannot copy content of this page