கொராணா தடுப்பூசி மருந்து பற்றாக்குறை ஏற்பட்டால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர் சுந்தரம் சுகாதாரத் துறைக்கு கோரிக்கை

கொராணா தடுப்பூசிகள் கோவாக்சின்,, மற்றும் கோவிஷீல்டு ஆகியன அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டு, அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார மையங்களிலும் பொதுமக்களுக்கு இலவசமாக போடப்பட்டு வருகிறது. முதல் டோஸ் இரண்டாம் டோஸ் என இரு நிலைகளில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு போடப்பட்டு வருகின்ற நிலையில் முதல் டோஸ் முடிந்து இரண்டாம் டோஸ் போடுவதற்காக 28 நாட்கள் கழித்து வருகின்ற பொழுது குறிப்பிட்ட வகை கோ வாக்ஸிங் அல்லது கோவி ஷீல்டு தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தினாலோ அல்லது வேறு காரணத்தினால் உரிய நாட்களில் அவர்களுக்கு போட முடியாமல் சென்று விடுகின்றது. இந்த தடுப்பூசிகளை முதல்முறையாக போட்டுக் கொள்வதற்காக வருகின்ற பொதுமக்களிடம் அவர்களுடைய முகவரி ஆதார் அட்டை மற்றும் செல்போன் நம்பர்கள் பெறப்படுகின்ற காரணத்தினால், மருந்து பற்றாக்குறை ஏற்பட்டால் முன்கூட்டியே அவர்களுக்கு தெரியப்படுத்தி விடவேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தினால் தேவையற்ற அலைச்சல் பொருளாதார செலவு மன உளைச்சல் தடுக்கப்படும். குறிப்பிட்ட வகை தடுப்பூசிமருந்து இல்லாத காரணத்தினால் பலபேர் நேரில் வந்து திரும்பிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்படுகின்றது. ஏற்கனவே ஒரு விதமான கஷ்ட மனநிலையில் உள்ள மக்கள் அரசு மருத்துவமனைக்கும் சுகாதார நிலையங்களுக்கும் வந்து திரும்பிச் செல்கின்ற பொழுது மேலும் பல்வேறு வேதனைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். நேர விரயத்தோடு பொருளாதார செலவும் அதிகரிக்கின்றது. ஆகவே இரண்டாவது டோஸ் தடுப்பூசி மருந்து போட்டுக் கொள்வதற்கு முன்கூட்டியே அறிவுறுத்தலையும் இல்லை என்றால் அதற்கான தகவலையும் சம்பந்தப்பட்ட செல்போனுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்கின்ற பட்சத்தில் அலைச்சல் குறையும். ஆகவே சுகாதாரத்துறை தடுப்பூசி போடுகின்ற விஷயத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நேரத்தில் வருகை தந்து போட்டுக் கொள்வதற்கான ஏற்பாட்டினை செய்து தரவேண்டும் என்று கோருகின்றோம்.

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page