25th September 2021

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் பயணிகள் ரயிலை மட்டும் இயக்க கோரிக்கை

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்களை மட்டும் முதல் நடைமேடையில் இருந்து இயக்க வேண்டும் என தென்னக ரயில்வேக்கு சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை,விழுப்புரம் வழித்தடத்திலும், காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் வழித்தடத்திலும், திருச்சி, தஞ்சாவூர் வழித்தடத்திலும் பயணிகள் ரயில்கள்,சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மயிலாடுதுறையில் காலை, மாலை வேலைகளில் இயக்கப்படும் ரயில்களை கல்லூரி மாணவ, மாணவிகளும், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும், தொழிலாளர்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

எனேவ, பயணிகளின் நலன் கருதி பயணிகள் ரயில்களை முதல் நடைமேடையில் நிறுத்தி இயக்க வேண்டும்.
காலை 8.10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்லும் ரயில் முதல் மேடையில் நிறுத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயில் 4-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டு உள்ளதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு கடலூர் செல்லும் சரக்கு ரயிலை முதல் நடைமேடை வழியாக இயக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You cannot copy content of this page