19th January 2022

மயிலாடுதுறை: வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு தரங்கம்பாடி மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்!

8 நாட்களுக்கு பிறகு தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும், சாதாரண வலையை கொண்டு மீன் பிடிக்கும் பைபர் படகு மீனவர்களுக்கும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. கடந்த 14-ந் தேதி சுருக்குமடி வலையுடன் கடலுக்கு சென்ற பூம்புகார் மற்றும் சந்திரபாடி மீனவர்களை தரங்கம்பாடி, வானகிரி குட்டியாண்டியூர், சின்னங்குடி உள்ளிட்ட கிராம மீனவர்கள் பைபர் படகுகளில் சென்று நடுக்கடலில் சுற்றி வளைத்தனர். அப்போது விசைப்படகு மோதி ஒரு பைபர் படகு மூழ்கியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையால் பூம்புகார் மீனவர்களுக்கு சொந்தமான 4 பைபர் படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் கடந்த 8 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை இரு தரப்பு மீனவர்களும் தனித்தனியாக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோரையும் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் திருமுல்லைவாசல் கிராமத்தில் மோதலில் ஈடுபட்ட சுருக்குமடி மீன்பிடி விசைப்படகு மற்றும் வலைகளை மீன்வளத்துறையினர் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சாதாரண வலையை பயன்படுத்தும் பைபர் படகு மீனவர்கள் சார்பில் போராட்டத்தை கைவிடுவதாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 8 நாட்களுக்குப் பிறகு நேற்று 20 கிராமங்களை சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான சாதாரண வலையை பயன்படுத்தும் பைபர் படகு மீனவர்கள் அதிகாலையில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.தரங்கம்பாடி பகுதியில் ஒரு வாரத்திற்கு பின்னர் மீன் பிடிக்கப்பட்டதால் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் தரங்கம்பாடி, பொறையாறு கடைவீதியில் குவிந்தனர்.

Advertisement

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page