21st September 2021

மயிலாடுதுறை: கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கொரோனா நோயின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவிவருகிறது. நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு விதமான தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தடுப்பூசி போட்டுக் கொள்ள மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர்.

முதல்டோஸ் போட்டுக் கொண்டவர்கள் முதலில் எந்த மருந்தை போட்டுக் கொள்கிறார்களோ அதே மருந்ததைதான் 2வது முறையும் போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது கோவாக்சின் மருந்து மிகவும் தட்டுப்பாடாக இருந்து வருகிறது. கோவிஷுல்டு தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி பொட்டுக்கொள்ள வருகை தரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில காலை 8.30மணி முதல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிபோட்டு கொள்வதற்காக பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்துள்ளனர். காலை 11 மணிக்குமேல் நின்று கொண்டிருந்தவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி மருந்து தீர்ந்துவிட்டது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு தலைமை மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SOURCE: http://www.puthiyathalaimurai.com/newsview/100586/Mayiladuthurai-Corona-vaccine-shortage-Public-involved-in-road-blockade


More News

சிதம்பரம் அருகே உள்ள வாய்க்காலில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை நெடுஞ்சாலை துறை கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட அலுவலகம் திறப்பு!

admin See author's posts

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்!

admin See author's posts

மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது!

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆசி பெற்றார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் மாபெரும் தூய்மைப்பணி முகாம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

admin See author's posts

வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், கிடராங்கொண்டான் பகுதிகளில் மின்நிறுத்தம்!

admin See author's posts

தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஆபத்துகளை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று ஆழ்வார் குளத்தில் பொதுமக்களுக்கு தத்துவ செயல்விளக்கம்!

admin See author's posts

விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது!

admin See author's posts

You cannot copy content of this page