23rd January 2022

மயிலாடுதுறை: பொதுமக்கள் தயக்கமின்றி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்- மாவட்ட ஆட்சியர் லலிதா!

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 24 சதவீதம் பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை. அவர்கள் எந்தவித அச்சமுமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தற்போது கொரோனா 3-வது அலை மிகவேகமாக பரவி வருகிறது. மயிலாடுதுறையில் நேற்று ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை, சீர்காழி அரசு ஆஸ்பத்திரிகளில் 300 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மயிலாடுதுறை ரெயிலடி மயூராஹால், வைத்தீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் நேற்று தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது நான் பூஸ்டர் டோஸ் செலுத்தி உள்ளேன். பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை எடுத்து செல்ல வலியுறுத்தி வருகிறோம். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இருந்தால் தான் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என வணிக நிறுவனங்களிடம் வலியுறுத்தி வருகிறோம்.

கொரோனா 3-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். எனவே பொது இடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் ‘ஸ்கிரீனிங்’ சென்டர்களுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மகேந்திரன், துணை இயக்குனர் டாக்டர் பிரதாப்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page