22nd January 2022

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் மார்கழி 27ம் நாள் வருடத்தில் ஒருநாள் எழுந்தருளும் நிகழ்ச்சியாக பெருமாள் தாயார் ஆண்டாள் மூவரும் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். மயிலாடுதுறை திருஇந்தளூரில் புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது ஆலயமும், பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமான பரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் மார்கழி 27ம் நாளன்று நடைபெறும் உற்சவத்தில் ஆண்டுக்கொருமுறை நடைபெறும் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் சன்னதியில் “கூடார வெல்லும் சீர் கோவிந்தா” என்ற ஆண்டாளின் திருப்பாவை 27வது பாசுரம் பாடப்பெற்று பெருமாள் பரிமள ரெங்கநாயகி ஆண்டாள் ஆகிய மூவரும் ஒன்றாக ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

பின்னர் ஆண்டாள் உள்பிரகாரம் மற்றும் சன்னதிதெருவில் வீதியுலா நடைபெற்று திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page