30th November 2021

மயிலாடுதுறையில் துலா உத்ஸவ பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி ஆய்வு

மயிலாடுதுறையில் நவம்பர் 16-ஆம் தேதி நடைபெற உள்ள துலா உத்ஸவ கடைமுக தீர்த்தவாரி விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை, மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கடைசி நாளில் கடைமுழுக்கு எனப்படும் கடைமுக தீர்த்தவாரி பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மயிலாடுதுறை காவேரி துலாக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் புனித நீராடுவார்கள். இவ்விழாவில், மக்கள் அதிக அளவில் பங்கேற்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டி, கடந்த மாதம் மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராம.சேயோன், தஞ்சை சரக காவல்துறை தலைவர் டிஐஜி லோகநாதனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதனடிப்படையில், டிஐஜி லோகநாதன் உத்தரவின்பேரில், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை காவிரி துலாக்கட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும், இந்த ஆண்டு உத்ஸவத்துக்கு முன் எப்போதும் இல்லாத அளவாக 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 

Leave a Reply

You cannot copy content of this page