26th October 2021

மயிலாடுதுறையில் இன்று முதல் மாபெரும் தூய்மை பணி! 1,2,3 வார்டுகளில் எம்.எல்.ஏ ராஜகுமார் துவங்கி வைக்கிறார்!!

மயிலாடுதுறை நகராட்சியில் வியாழக்கிழமை முதல் (அக் .7) மாபெரும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியது:

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் சுழற்சி முறையில் மாபெரும் தூய்மை பணிகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியின் போது, சாலையோரம் உள்ள குப்பைகள் 100 சதவீதம் அகற்றப் படுவதோடு, தூர்ந்து போன மழைநீர் வடிகால்கள், புதை சாக்கடை கழிவு நீர் வெளியேறுவது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். நாளொன்றுக்கு குறைந்தது 3 வார்டுகள் என்ற அடிப்படையில் வாரத்துக்கு 3 நாள்கள் என அக்டோபர் 30-ம் தேதிக்குள் இப்பணி முழுமையாக நிறைவடையும். இப்பணி நடைபெறும் நாள்களில் தொடர்புடைய வார்டுகளுக்கு நகராட்சி , பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகளுடன் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்கவுள்ளேன்.

இப்பணியின்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பரிசோதனைகளும், நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வாகனங்கள் மூலம் விடுபட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page