30th November 2021

மயிலாடுதுறை: வீடு தேடி வரும் நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் மெய்யநாதன் தகவல்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று, கொரோனா தொற்றால் ஒற்றை பெற்றோரை இழந்த 15 குழந்தைகள் மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனம் உள்ளிட்ட ரூ.49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைகள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து கலந்தாலோசித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் மக்களின் பிரச்னைகளை அறிந்து, பயனாளிகளை தேர்வு செய்து அதற்கான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளின் இல்லத்துக்கே கொண்டு சேர்க்கும் பணியை தொடங்க உள்ளோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்க்காப்பீட்டுத் தொகை பல்வேறு பகுதிகளில் சரிவர வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

அதன் விபரத்தை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளோம். அது வந்தவுடன் தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் மழை வெள்ள காலங்களில் நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அங்கு வடிகால் வசதி மேம்படுத்தப்படும் என்றார். இக்கூட்டத்தில் ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page