25th January 2022

மயிலாடுதுறை மாவட்ட சிறு குறு விவசாயிகளுக்கு இலவச வாடகை டிராக்டர் உழவு திட்டத்தினை பயன்படுத்தலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகின்றது. இந்த தருணத்தில் நெல் சாகுபடிக்கு வயல் தயார் செய்து தருவதற்கு டாபே நிறுவனம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வயல்களை இலவசமாக உழுது தர முன்வந்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகளின் விளைநிலம் 2 ஏக்கருக்கு குறைவாக இருக்க வேண்டும். பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் கார்டு நகல், 2 ஏக்கர் அல்லது அதற்கு குறைவாக உள்ள நிலப்பரப்பின் பட்டா நகல் கொடுக்க வேண்டும். இந்த இலவச வாடகை உழவு திட்டத்தினை அருகாமையில் உள்ள டாபே மற்றும் ஈச்சர் டிராக்டர் வைத்துள்ள உரிமையாளர்கள் மூலம் டாபே நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருவதால் பதிவு செய்த அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் டாபே நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண்: 18002084242 / 18004200100 அல்லது 9500691658 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையும்படி மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page