3rd December 2021

மயிலாடுதுறையில் மயூரநாதர் அஞ்சலி தொடங்கியது – ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்பு

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாட்டியாஞ்சலி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்தவகையில் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாருக்குப் பறைசாற்றும் உன்னத நோக்கோடு மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 15-ஆம் ஆண்டு மயூரநாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் கோலாகலமாக தொடங்கியது.

துவக்க விழாவில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் தலைவர் பரணிதரன் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மருத்துவர் செல்வம், சிவலிங்கம், ரவிச்சந்திரன், செந்தில்வேல், பாண்டுரங்கன், முனைவர் சத்தியன், செந்தில்குமார், அழகேசன் உள்ளிட்டோர் மங்கல ஒளிவிளக்கேற்றி மயூரநாட்டியாஞ்சலி விழாவை தொடங்கி வைத்தனர்.

மங்கல இசையுடன் தொடங்கிய முதல் நாள் நாட்டியாஞ்சலி விழாவில் சென்னை நரேந்ரா நாட்டிய குழுவினர், கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா குழுவினர், கோயம்புத்தூர் சங்கரம் ஸ்கூல் ஆஃப் டான்ஸ் குழுவினர் மற்றும் ஸ்ரீவிஷ்ணு நாட்டியாலயா உள்ளிட்ட குழுவினரின் நாட்டிய நிகழ்வுகள் நடைபெற்றது.

மயூர நாட்டியாஞ்சலி விழாவில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் குருமார்களுக்கும், கலைஞர்களுக்கும் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 15-ஆம் ஆண்டு மயூரநாட்டியாஞ்சலி விழாவில் நாதஸ்வர இசைக் கலைஞர் விவேகானந்தன் கலைப்பணியை பாராட்டி “மயூர நாதஸ்வர சுகஸ்வர இளவல்” விருதும், தவில் இசைக் கலைஞர் ரெட்டியூர் ஹரிஹரனுக்கு “மயூர லயஞான தவிலிசை இளவல்” என்ற விருதும், நடனக் கலைஞர் சென்னை நரேந்திரகுமாருக்கு “மயூர நட்டுவாங்க நண்மனி” விருதும், மூத்த நடனக் கலைஞர் கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலாவின் கலைப் பணியை பாராட்டி “மணிமேகலை பொற்சதங்கை” என்ற விருதையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா ஐபிஎஸ், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வழங்கி பாராட்டினர்.

திங்கள்கிழமை தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி தொடர்ந்து மூன்று நாட்கள் வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணி முதல் இரவு வரை பல்வேறு நாட்டிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

முதல் நாள் நாட்டியாஞ்சலி விழாவில் ஏராளமான கலை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளை செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார். இணைச் செயலாளர் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

You cannot copy content of this page