22nd October 2021

மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 120 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப. , தலைமை வகிக்க, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் என்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்காக தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு 25 நாட்களுக்குள் கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். அந்த அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றின்வேகம் குறைந்திருக்கிறது. இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்றினை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் மருத்துவத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சிதுறை, காவல்துறை உள்ளிட்ட துறைகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மயிலாடுதுறை பகுதி மக்களுக்காக இன்றைக்கு மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் 120 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 25 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் பயன்படுத்தப்படுகிறது. தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பணியில் ஈடுப்படுத்தபட்டுள்ளனர். இச்சிகிச்சை மையத்தில் தேவையான மருந்துகளும் உள்ளது.; கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் நாளை முதல் இச்சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகையில் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றிட வேண்டும். குறிப்பாக தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்த்திட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரகாஷ், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More News

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

admin See author's posts

மயிலாடுதுறை: கூறைநாடு நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கும் மழை நீரால் கர்ப்பிணிகள் அவதி!

admin See author's posts

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

admin See author's posts

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

admin See author's posts

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்!

admin See author's posts

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மது அருந்துபவர்கள் அட்டகாசம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை!

admin See author's posts

You cannot copy content of this page