8th December 2021

உதயசூரியன் வடிவத்தில் கருணாநிதியின் நினைவிடம் – தலைவர்களின் நினைவிடங்களும் தொடரும் சர்ச்சைகளும்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் உதயசூரியன் வடிவில் நினைவிடம் கட்டப்படுகிறது. 2.21 ஏக்கரில் கட்டப்படும் கருணாநிதி நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவில் பிரம்மாண்ட தூணும் அமைக்கப்படுவதாக மாதிரி வடிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் கருணாநிதி காலமானார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 50 ஆண்டு திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் 2.23 ஏக்கரில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் எனவும், கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமையும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான அதிமுகவும் மகத்தான வரவேற்பை அளித்துள்ளது.

உதயசூரியனும் பேனாவும் 2.21 ஏக்கரில் கட்டப்படும் கருணாநிதி நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உதயசூரியன் வடிவத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படுகிறது. நினைவிடத்தின் முகப்பில் திறந்துள்ள பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியையும் பேனாவையும் எப்போதும் பிரிக்க முடியது. பவுன்டன் பேனாவை தனது சட்டைப்பையில் வைத்திருப்பார். அவர் மரணமடைந்த பின்னர் இறுதி அஞ்சலி நடந்தபோது சட்டைப் பையில் அந்தப் பேனா வைக்கப்படவில்லை. அதனைக் கவனித்த கனிமொழியின் மகன் ஆதித்யா, பேனாவை கருணாநிதியின் சட்டைப்பையில் எடுத்து வைத்தார். இப்போது அவரது நினைவிடத்தின் முன்பு பிரம்மாண்ட பேனா வடிவத்தில் தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

திமுக நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான அண்ணாவிற்கு மெரீனாவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகரத்திற்கு வரும் மக்கள் அனைவரும் அண்ணா சமாதியை பார்த்து விட்டு செல்வார்கள். அண்ணா நினைவிடத்தில் மிகப்பெரிய தூண் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது என்ற வாசகம் அவரது நினைவிடத்தில் எழுதப்பட்டிருக்கும். சமாதியைச் சுற்றியிலும், அவரது பொன்மொழிகள் புத்தக வடிவிலான கல்வெட்டுக்களில் செதுக்கப்பட்டன. அணையா விளக்கு ஒன்றையும் ஏற்றிவைத்தார் அப்போதய முதல்வர் கருணாநிதி.

 

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page