30th November 2021

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் !

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம்,அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவின் சிறப்பம்சங்கள்:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணி 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இதன் கட்டுமான பணி அனைத்தும் நிறைவடைந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் பழனிசாமியால் திறக்கப்பட்டது.உலக புகழ் பெற்ற மெரினா கடற்கரையில்,80 கோடி ரூபாய் மதிப்பில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பீனிக்ஸ் பறவையின் உயரம் 15 மீட்டர் நீளம்,30 மீட்டர் அகலம், 43 மீட்டர் ஆகும்.இதற்கான இறகுகள் துபாயிலிருந்து கொண்டுவரபட்டன.

இதற்கு அருகில் 12 கோடி ரூபாய் செலவில் அம்மா அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.அருங்காட்சியகத்திற்கு உள்ளே தத்ரூபமான ஜெயலலிதா அம்மாவின் சிலிக்கான் சிலை நிறுவப்பட்டுள்ளது.

குறிப்பாக இங்கு வரக்கூடிய மக்கள் ஜெயலலிதாவிடம் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் அளிக்குமாறு தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளது.அருகில் உள்ள அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும், டிஜிட்டல் முறையில் மலர் அஞ்சலி செலுத்தவும் மற்றும் பல நவீன தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

You cannot copy content of this page