3rd December 2021

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது நூலகக் கட்டிடம், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 33.47 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மூன்று கட்டிடங்களுக்கான திறப்பு விழா நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ரிப்பன் கத்தரித்து, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைசந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப் பட்ட காரணத்தால் பள்ளி செல்லும் குழந்தைகள் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் மனரீதியாக மீண்டும் நடைமுறை வாழ்க்கைக்கு வரவேண்டும் என்பதற்காக நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படுகின்றன.

பள்ளிக்கு வருவதும் வராததும் மாணவ மாணவிகள் விருப்பம் என்ற போதிலும் பள்ளிக்கு வராத மாணவர்கள் கல்வி கற்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் கல்வி தொலைக்காட்சி உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். இருப்பினும் பெருமளவு அதாவது 55 சதவிகிதம் அளவு வழக்கமான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் மாதிரி தேர்வு ஒன்றும் நடைபெறும் தேர்வு முறையில் மாற்றம் இன்றி மார்ச் ஏப்ரல் மாதங்களில் வழக்கமான தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் மு.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகனசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் நன்றியுரையாற்றினார்.

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

You cannot copy content of this page