30th November 2021

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை பயனாளிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை வளர்ச்சித்திட்ட பணிகள் தொடர்பாக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது:-

மக்களுக்கு தரமான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கிட வேண்டும். மக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

மேலும் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னேற்பாடு பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள் பாதிக்காத வகையில் அவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு இடங்களும் தயார் நிலையில் உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் தேவையான அளவு மணல் முட்டைகளை கையிருப்பு உள்ளது. அதேபோன்று நீச்சல் பயிற்சி பெற்ற முன் களப்பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

குறிப்பாக சாதாரண மக்களுக்கு தேவையான இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை குறித்த பயனாளிகளை தேர்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக காவல் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, பொதுப்பணித் துறை,மின்சார துறை, சுகாதாரத் துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அமைச்சர் விரிவாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கொரோனா தொற்றால் ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையாக தலா ரூ.3 லட்சம் வீதம் 15 குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.45 லட்சத்திற்க்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு தலா ரூ.76 ஆயிரத்து 500 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தையும் மொத்தம் ரூ.48 லட்சத்து 82 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.சுகுணா சிங் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகண்ணன், மாவட்ட ஊராட்சிதலைவர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page