அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் தந்தை மறைவு – முதல்வர் பழனிச்சாமி இரங்கல்

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை போஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. அமைச்சரின் தந்தையின் மறைவுக்கு முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியின் வேட்பாளராக களம் இறங்கினார். டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அம்மா கோவில் வளாகத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.

இவரது பெற்றோர்களும் அமைச்சருடன் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் உதயகுமார் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

சென்னையில் நேற்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றிருந்தார். இதனால் சென்னையில் இருந்த அவருக்கு தந்தையின் மறைவு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மறைந்த போஸ் உடல் டி.குன்னத்தூர் அம்மா கோவில் வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணிக்கு அம்மா கோவில் வளாகத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் தந்தை மறைவுக்கு முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு வருவாய்,பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு ஆர்.பி.உதயகுமார் அவர்களின் தந்தை திரு. ஆர்.போஸ் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

போஸ் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page