தமிழகம் திரும்பிய முதல்வருக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு!



தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 24 மாலை துபாய் பயணம் மேற்கொண்ட நிலையில் இன்று அவர் தமிழகம் திரும்பியுள்ளார்.
துபாயில் 6 முக்கிய நிறுவனங்களுடன் 6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு, துபாய் வாழ் தமிழர்கள் மத்தியில் உரையாடல், சர்வதேச கண்காட்சியில் தமிழ் அரங்கம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர் இன்று தமிழகம் திரும்பினார். தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.