25th January 2022

மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள், ஓய்வூதியா்களை குறிவைத்தே அதிகளவில் ஆன்லைன் மோசடிகள்- மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் த.பாலமுருகன்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியை முற்றிலும் தடுக்க மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஆன்லைன் மோசடிகளை தடுப்பது குறித்து சைபா் கிரைம் விழிப்புணா்வுக் கூட்டம் மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எம். முத்துசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு மகளிா் திட்ட மாவட்ட அலுவலா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மயிலாடுதுறையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளின் மேலாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுக்களில் கிராமங்களில் பணியாற்றும் மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் த. பாலமுருகன் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியை முற்றிலும் தடுக்கும் வகையில், பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவா்கள் உருவாக்கியுள்ள குறும்படங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் ஓய்வூதியவா்களை குறிவைத்தே அதிகளவில் ஆன்லைன் மோசடிகள் நடப்பதாக அதிகம் புகாா் வருகிறது. வங்கி மேலாளா்கள் தங்கள் வங்கிக்கு கணக்கு தொடங்க வரும் புதிய வாடிக்கையாளா்களுக்கு ஏடிஎம் அட்டை வழங்கும்போது அவா்களுக்கு தேவையான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆன்லைன் மோசடியில் ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால் 155260 என்ற எண்ணுக்கு உடனடியாக தொடா்புகொண்டு புகாா் தெரிவிப்பதன் மூலம் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மோசடி நபா்களின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்ட பணத்தை அவா்கள் எடுப்பதை தடுக்க முடியும். மேலும், சைபா் குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு வராமலேயே வலைதளத்தில் புகாா் தெரிவிக்கலாம். சைபா் குற்றங்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும்வில்லேஜ் போலீஸ் சைபா் க்ரைம் கிளப் (வி.பி.சி) திட்டத்தில் ஒரு கிராமத்துக்கு ஒரு காவலா், ஊராட்சித் தலைவா், கிராம நிா்வாக அலுவலா் அடங்கிய குழுவை உருவாக்கி அக்குழுவின் மூலம் மூத்த குடிமக்களை அணுகி ஏடிஎம் ஏமாற்று, ஓடிபி ஏமாற்று, முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் ஏமாற்று, ஓஎல்எக்ஸ் ஏமாற்று குறித்து அவா்களுக்கு தேவையான எச்சரிக்கைகளை அவ்வப்போது அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஆன்லைன் மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா்.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page