மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளரிடம் தரக்குறைவாக பேசிய சுகாதார நிலைய கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநிலம் தழுவிய போராட்டம்

மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளரிடம் தரக்குறைவாக பேசிய சுகாதார நிலைய கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் இணைந்து 11 அம்ச கோரிக்கைகளை துணை இயக்குனரிடம் கூறினர். இந்நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் கோரிக்கைகள் நிறைவேற்றபடும் என உறுதி அளித்ததன் பேரில் சுமூகமாக பேச்சுவார்த்தை முடிந்தது. இந்நிலையில் இந்த கோரிக்கைகளுக்கு ஏதிராக திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர் வேலுமணி என்பவர் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் கிழக்கு மண்டல செயலாளர் ராஜ்குமார் என்பவரிடம் தொலைபேசியில் கொச்சை வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் அவர்களது சங்கத்தை பற்றி இழிவாக பேசி , ராஜ்குமார் மீது பொய் புகார் அளித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.இது தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் வேலுமணி மீது புகார் அளிக்கப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில்

சம்பந்தப்பட்ட திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர் வேலுமணி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த போராட்டத்தில் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்வதாகவும் தெரிவித்தனர் . இதுதொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மற்றும் பொது சுகாதார இயக்குனர் அவர்களிடமும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார கண்காணிப்பாளர் வேலுமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page