ஆஸ்திரேலியாவில் பிறந்து மயிலாடுதுறை பகுதியில் 49 ஆண்டுகாலம் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து மருத்துவர் தினத்தன்று உயிர் நீத்த வெள்ளைக்கார டாக்டர் அம்மா:-

ஆஸ்திரேலியாவில் 1923ஆம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி பிறந்தவர் பில்லிப் ரோட்ரிக்ஸ். சென்னையில் எம்பிபிஎஸ் படித்த இவர் 1949ம் ஆண்டுகள் மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்1955 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்தில் கட்டப்பட்டு மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்த மகப்பேறு மருத்துவமனைக்கு மருத்துவராக நியமிக்கப்பட்டார். அதிலிருந்து 35 ஆண்டு காலம் நகராட்சி மகப்பேறு மருத்துவமனை மருத்துவராக பணியாற்றினார். மருத்துவமனையில் இருக்கும்போது மட்டுமின்றி டவுண்டேஷன் அருகில் குடியிருந்து கொண்டு வீட்டில் இருந்தும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். மயிலாடுதுறை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அவசர பிரசவங்களுக்கு இரவு எத்தனை மணி அளவில் இருந்தாலும் மாட்டுவண்டியில் சென்று பிரசவம் பார்த்து வந்தார். நகராட்சி மருத்துவமனை என்பதை மறந்து பொதுமக்கள் வெள்ளைக்காரம்மா ஆஸ்பத்திரி என்று அடைமொழியுடன் அழைக்கும் அளவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
ஆங்கிலோ இந்தியன் ஆன இவரது கணவர் தெற்கு ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது கணவர் மறைந்த பின்பு முதுமை காரணமாக 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள இவரது குடும்பத்தினருடன் சென்று வசித்து வந்தார். கடந்த மே மாதம் 16ஆம் தேதி தனது 98வது வயதில் குடும்பத்தினருடன் கொண்டாடிய திருமதி ரோட்ரிக்ஸ் கடந்த சில நாட்களாக முதுமை காரணமாக நோயுற்று இருந்தார். இந்நிலையில் மருத்துவர் தினமான நேற்று அவர் உயிரிழந்ததாக ஆஸ்திரேலியாவிலுள்ள அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறையின் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஆக ஆயிரக்கணக்கான பிரசவங்களை, பணம் இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்த்த வெள்ளைக்காரம்மா டாக்டர் மறைவிற்கு மயிலாடுதுறை பொதுமக்கள் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page