25th January 2022

மயிலாடுதுறை மாவட்டத்தில் 63,666 பேருக்கு கொரோனா பரிசோதனை – 17,276 பேருக்கு தோற்று உறுதி

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2020 ஆண்டு முதல் கொரோனா தொற்று குறித்த பரிசோதனை செய்வதற்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு முகாம்களிலும் பரிசோதனை முகாம் செயல்பட்டு வருகிறது. சென்ற ஆண்டிலிருந்து நேற்று வரை 63,666 சோதனை செய்யப்பட்டதில் 17,276 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மே 5 லிருந்து ஜூன் 5 வரை தொற்று ஏற்பட்டவர்கள் 8232 பேர் கடந்த மாதம் 5ம் தேதி 131 என்ற கணக்கில் துவங்கிய தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மே 30ம் தேதியிலிருந்து திடீரென உயர்ந்து தினந்தோறும் 200லிருந்து 400 வரை எகிறியது. பிறகு படிப்படியாக குறைந்து நேற்று கொரோனா தொற்று 252 ஆக மாறியது. கடந்த மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆரம்பித்ததிலிருந்து நேற்று வரை 45 வயதிற்கு மேற்பட்டோர் 51,351 செலுத்தி கொண்டுள்ளனர். 18 முதல் 44 வயது வரை 13,303 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது வரை 64,654 நபர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வரை 2663 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2234 நபர்கள் வீட்டுத்தனிமையில் சிகிச்சையில் உள்ளனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆச்சிஜன் படுக்கையில் 77 பேர் , கொரோனா சிறப்பு மையங்களில் 487 பேர் சிகிச்சையில் உள்ளனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, சீர்காழி அரசு மருத்துவமனை, புத்தூர் அரசு கலைக்கல்லூரி, தரங்கம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவமனை போன்றவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . மேலும் கொரோனா சிறப்பு சேவை மையமான ஏவிசி கலைக்கல்லாரி , புத்தூர் அரசு கலைக்கல்லாரி மற்றும் தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரிகளிலும் சிகிச்சை நடைபெற்று வருகிறது.
தனியார் மருத்துவமனை சார்பில் மயிலாடுதுறை மில்லியன் டே ஹோட்டலிலும், விஆர்எஸ் ரெசிடென்ஸியிலும் சிகிச்சை நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை சித்த மருத்துவமனை வளாகத்தில் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page