22nd October 2021

மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் சிலிண்டர்கள் வழங்கும் விழா

கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு மிக முக்கிய உயிர் காக்கும் காரணியாக இருப்பது ஆக்சிஜன் செறிவூட்டிகள். கொரோனா இரண்டாம் அலை காரணமாக அதிக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் ரோட்டரி சங்கங்கள் அரசோடு இணைந்து இந்தப் பெரும் தொற்றில் இருந்து நாட்டை மீட்கும் பணியில் செயலாற்றி வருகிறார்கள். வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ள ஆக்ட் கிரான்ஸ் என்ற அமைப்பு ரோட்டரி சங்கங்கள் மூலம் அகில இந்தியா முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்க முன் வந்துள்ளார்கள்.

மெட்ராஸ் வடக்கு ரோட்டரி சங்கத்தின் ஆரம்ப முயற்சியால் ஆக்ட் கிரான்ஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளது இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான ரோட்டரி சங்கம், பெங்களூரை சேர்ந்த சுவஸ்த் மற்றும் யுனைடெட் வே ஆகிய அமைப்புகளிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், ஈரோடு, ஊட்டி, திருப்பூர், உடுமலை, தாராபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச ரோட்டரி சங்க தலைவர் சேகர் மேத்தா இந்திய ரோட்டரி சங்க கோவிட்-19 தமிழக பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஒளிவண்ணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் இராமன் ஆகியோரது முயற்சியில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரூபாய் இருபது லட்சம் மதிப்பிலான 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் 41 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா, சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி பாபு, அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் ராஜசேகர், ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் ரவிக்குமார், மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவர் துரை, செயலாளர் காமேஷ் குமார் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இந்த விழாவில் மாயூரம் ரோட்டரி சங்க தலைவர் சேகரன், செயலாளர் கல்யாணசுந்தரம், மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் சிவபாலன், செயலாளர் காந்தன், கிங்ஸ் ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் தில்லைநாயகம், டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ஜெயராஜ், செயலாளர் வேணுகோபால், பிரைடு ரோட்டரி சங்க தலைவர் வேலாயுதம், செயலாளர் சரவணன் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

More News

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

admin See author's posts

மயிலாடுதுறை: கூறைநாடு நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கும் மழை நீரால் கர்ப்பிணிகள் அவதி!

admin See author's posts

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

admin See author's posts

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

admin See author's posts

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்!

admin See author's posts

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மது அருந்துபவர்கள் அட்டகாசம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை!

admin See author's posts

You cannot copy content of this page