மயிலாடுதுறை மாவட்டத்தை குழந்தைத் திருமணம் இல்லாத மாவட்டமாக முன்னெடுக்க உறுதியேற்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

குழந்தை திருமணத் தடைச்சட்டம் 2006-ன்படி பெண்ணிற்கு 18 வயதும், ஆணிற்கு 21 வயதும் நிறைவடையாத நிலையில் நடைபெறும் திருமணங்கள் குழந்தைத் திருமணம் ஆகும். குழந்தைத் திருமணம் நடைபெறுவதால் பெண் குழந்தைகளின் கல்வி தடைபடுகிறது. பெண்களுக்கு கர்பப்பை முழு வளர்ச்சி அடையாததால் அடிக்கடி கருச்சிதைவும், குழந்தை எடை குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள் பிறக்க நேரிடுகிறது.

சில நேரங்களில் தாயும் சேயும் பிரசவத்தின் போது அல்லது பிரசவத்திற்கு பின்னர் இறந்துவிடும் சூழ்நிலை உருவாகிறது. குழந்தைத் திருமணம் செய்யப்படும் ஆண் மற்றும் பெண் என இருவரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள திறன் இல்லாமல் இருத்தல், தன்னம்பிக்கை குறைதல், தற்கொலை எண்ணம், இளம் வயதில் விதவையாதல், குடும்பத்தினரால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுதல் போன்றவை ஏற்பட்டு பெண்குழந்தையின் வாழ்வே வீணாகும் நிலை ஏற்படுகிறது. குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-ன் கீழ் மாவட்ட சமூகநல அலுவலர், குழந்தைத் திருமண தடுப்பு அலுவலராக உள்ளார். குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-ன் படி, இக்குற்றமானது நடவடிக்கைக்கு உரிய பிணையில்லா குற்றமாகும். இச்சட்டத்தின்படி, குழந்தைத் திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள் அல்லது வழிகாட்டுபவர்கள் அல்லது துணைபோகிறவர்கள். பெண்குழந்தையைதிருமணம் செய்யும் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்.

பெண் குழந்தையின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர். குழந்தைத் திருமணத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள். அனுமதி அளித்தவர்கள், பங்கேற்றவர்கள், திருமணம் நடைபெற்ற திருமண மண்டபத்தின் உரிமையாளர்கள் என மேற்குறிப்பிட்ட அனைவரும் குற்றவாளிகள் ஆவார்.
குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-ன் படி, குற்றம் புரிந்தவர்களுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 இலட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். குழந்தைத் திருமணம் தொடர்பான புகார்களை 1098 என்ற சைல்டு லைன் எண்ணில் தெரிவிக்கலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெற்றோர்கள் குழந்தை திருமணம் குறித்த விழப்;புணர்வுடன் செயல்பட்டு மயிலாடுதுறை மாவட்டத்தை குழந்தைத் திருமணம் இல்லாத மாவட்டமாக முன்னெடுக்க உறுதியேற்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா,இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

More News

திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

Rathika S See author's posts

தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்

Rathika S See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை ….,

Rathika S See author's posts

கொராணா பரிசோதனை அதிகம் மேற்கொண்ட மயிலாடுதுறை நகராட்சி சுகாதார குழுவினரை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் பாராட்டினார்.

Rathika S See author's posts

தமிழக கேரளா எல்லைகளை உடனடியாக மூடவேண்டும் சீமான் வலிவுறுத்தல்

Rathika S See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்தும் துறை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் அமைச்சர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.லலிதா வழங்கினார்.

Rathika S See author's posts

பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை

Rathika S See author's posts

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!

Rathika S See author's posts

பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி வைத்தார்!

admin See author's posts

‘முரால்” முறை பெயிண்டிங்: மின்னும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page