மயிலாடுதுறை அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறப்பு; போலீசார் தீவிர விசாரணை!

மயிலாடுதுறை அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை அருகே நீடூர் பாவாநகர் ரெயில்வே கேட் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட சோதனையில் அந்த இளம்பெண் விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. மேலும் நீடூர் ெரயில்வே கேட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக நீடூர் கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீலநிற சுடிதாரும்,ரோஸ் கலர் பேண்ட்டும், அதே கலரில் ஷாலும் அணிந்திருந்தார். அந்த பெண் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் 94420 03309, சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் 63804 18985 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page