30th November 2021

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 6 பேர் தீக்குளிக்க முயற்சி

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயிற்சித்த 6 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகேயுள்ள சுந்தரம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் ரா.சுரேஷ். இவருக்குச் சொந்தமான லாரியில் விழுப்புரம், குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தணிகாசலம் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நவம்பர் 15-ஆம் தேதி  நாகை மாவட்டம், மணல்மேடு முட்டம் பாலம் அருகே, இந்த லாரியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றப்பட்டுருந்ததாக கூறி நாகை மாவட்ட சுரங்கத்துறை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்யதனர். இதற்கிடையில், லாரி உரிமையாளரான சுரேஷ் மற்றும் இவரது மனைவி கோமதி, மகள்கள் பார்கவி, மகிமா,  மகன் கீரித்திக்  மற்றும் லாரி ஓட்டுநர் தணிகாசலம் ஆகியோருடன் திங்கள்கிழமை மாலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து உரிய அனுமதியுடன் தான் லாரியில் மணல் ஏற்றிச் செல்லபட்டதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை அனைவரும் தங்களது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.  பின்னர், தீக்குளிக்க முயன்ற 6 பேரையும் விசாரனைக்காக நாகூர் காவல் நிலையத்துக்கு  அழைத்துச் சென்றனர்.

SOURCE: https://epaper.dinakaran.com/2424613/Trichy-Main/19-11-2019#page/3/2

 

Leave a Reply

You cannot copy content of this page