19th January 2022

“மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும்” – ராமதாஸ்

நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் அமைக்க உள்ள அரசு மருத்துவக் கல்லூரியை, மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 3 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று, நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் அமைக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். நாகையில் இருந்து, 23 கிலோ மீட்டர் உள்ள  திருவாரூரில், ஏற்கனவே மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருவதால், 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று ராமதாஸ், வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

You cannot copy content of this page