3rd December 2021

நாகையில் ஆர்பாட்டதில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு சார்பு ) சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்சார வாரியம் நாகை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மின்வாரியத் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலனை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கவேண்டும் , மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கி மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கக்கூடாது, ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனே தொடங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நகை திட்டத் தலைவர் எஸ். சிவராஜன் தலைமை வகித்தார். திட்டச் செயலாளர் எம். கலைச்செல்வன், பொருளாளர் ஆர். செந்தில்குமார், மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த கே. வேல்முருகன் ஆகியோர் பேசினர்.

மின்சாரவாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு நாகை மாவட்டக்குழ ஊறுப்பினர் என். வெற்றிவேல் நன்றி கூறினார்.

Leave a Reply

You cannot copy content of this page