நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்படும் சிறுவர்கள் மற்றும் சிறுமியருக்கான பேச்சுப்போட்டி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக “பொது ஊரடங்கு உத்தரவின் போது குழந்தைகள் தங்கள் நேரத்தை எவ்வாறு திறம்பட செலவிடுகிறார்கள்” என்ற தலைப்பில் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் 10 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமியருக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள 15.05.2020 முதல் 17.05.2020 தேதிக்குள் மேற்கண்ட தலைப்பு தொடர்பாக Zoom Cloud செயலி மூலமாக பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது.

இந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் தங்களுடைய பெயர் ,முகவரி, மற்றும் தொலைபேசி எண்களை 04362-278100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் அல்லது 5 நிமிடங்கள் பேசி தங்களது வீடியோ பதிவு செய்து :7598611001/9445950584 என்ற (WhatsApp) வாட்ஸ்ஆஃப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். இதில் சிறந்த போட்டியாளர் தேர்வு செய்யப்பட்டு முதல் முன்று நபர்களுக்கு முறையே முதல் பரிசு ரூபாய்-3000/-, இரண்டாம் பரிசு ரூபாய்-2000/-, மூன்றாம் பரிசு ரூபாய்-1000/- மேலும் ஆறுதல் பரிசாக பத்து நபர்களுக்கு தலா ரூபாய்-500/- வழங்கப்படும் என்றும், மேலும் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களின் வீடியோ பதிவு நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு கௌரவிக்கப் படுவார்கள் என்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்.

“நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை “

More News

சென்னையை சேர்ந்த வெள்ளி பதக்கம் வென்ற உலக ஆணழகன் செந்தில்குமரன் மாரடைப்பால் காலமானார்

admin See author's posts

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page