நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்-மத்திய அரசு அறிவிப்பு!

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி  நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இன்று மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நடப்பாண்டில் 198 நகரங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வு மையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கப்படும் என்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்படும் எனவும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.


Source: News7 Tamil

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page