25th January 2022

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 50 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் எம்எல்ஏ நிவேதா முன்னிலையில் பொறையாறு அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு அரசு அரசு மருத்துவமனை மற்றும் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பொறையார் மற்றும் கோமல் அரசு மருத்துவமனைக்காக ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான முக கவசம், பல்ஸ் மானிட்டர், பிரஸர் மானிட்டர், ஸ்டேதெஸ் ஸ்கோப், டேபிள் பேன், கூரை பேன், கை உறை, சானிடைசெர், நெபுளைசெர், டிஜிட்டல் பல்ஸ் மீட்டர், கட்டில் தலையணை உள்ளிட்ட கொரோனா அவசரகால மருத்துவ உபகரணங்களை முதன்மை மருத்துவ அலுவலர் ஹஃசா சுல்தானா இடம் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார் மாநில செய்தி தொடர்பாளர் வெங்கடேசன் மாவட்ட செயலாளர் புகழேந்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம் கே செந்தில் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் வரவேற்புரை ஆற்றிய பேசினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அப்துல்மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பிஎம் ஸ்ரீதர், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைமை நிலைய செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட துணை தலைவர் காந்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெய்சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜலிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் மீரா காந்தி, செம்பனார்கோவில் ஒன்றிய சங்க தலைவர் ராஜதிலகர், செயலாளர் பெனடிக் ட்பிளேவியன், பொருளாளர் கண்ணன், அமைப்பாளர் முருகானந்தம், குத்தாலம் ஒன்றிய சங்கத் தலைவர் பார்த்திபன், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் பாலமுருகன், அமைப்பாளர் தண்டபாணி, செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கே ஆர் மகேஷ் நன்றி உரையாற்றினார்.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page