செம்பனார்கோவிலில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவிலில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமணநிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 427 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 13 லட்சத்து 90 ஆயிரத்து 952 மதிப்பிலானதிருமண நிதியுதவியுடன்கூடிய தாலிக்கும் தங்கம் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பயனாளிகளுக்குதலா ரூ.2000 கொரோனா நிவாரண நிதியுதவியையும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர். எஸ்.ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர. நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் .எம்.பன்னீர்செல்வம்,மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர். எஸ்.ராஜகுமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர். இரா.லலிதா இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 427 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 13 லட்சத்து 90 ஆயிரத்து 952 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன்கூடிய தாலிக்கும் தங்கம் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 23 நபர்களுக்கு தலா ரூ.2000 கொரோனா நிவாரண நிதியுதவியையும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர். செ.ராமலிங்கம்,  பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர். நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர். எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் . எஸ். ராஜகுமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் . இரா.லலிதா இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது.
பெண்கள் கல்வி என்பதை ஆயுதமாக பயன்படுத்தி சமூதாயத்தில் முன்னுக்கு வர வேண்டும். தமிழக அரசு பெண்கல்வியை ஊக்குவிக்கின்ற வகையில் சீரிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. பெண்கள் முயற்சி செய்தால் சாதிக்க முடியாதவை எதுவும் இல்லை. பெண்கல்வியை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். தமிழக அரசானது பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்ற வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், குழந்தைகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து தீர்வு காணுகின்ற வசதியை தமிழக அரசு உருவாக்கி தந்துள்ளது. தமிழக அரசானது 10ஆம் வகுப்பு படித்து முடித்த ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியாக ரூ.25 ஆயிரமும் , 8 கிராம் தங்கமும், பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு படித்து முடித்த பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரமும், 8 கிராம் தங்கமும் வழங்கி வருகிறது. அந்தவகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்றையதினம் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 427 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 62 லட்சம்; திருமண நிதியுதவியும் , ரூ. 1 கோடியே 51 லட்சத்து 90 ஆயிரத்து 952 மதிப்பிலான தங்கமும் ஆக மொத்தம் ரூ.3 கோடியே 13 லட்சத்து 90 ஆயிரத்து 952 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் தாலிக்கும் தங்கம் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 23 நபர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.2000 வீதம் ரூ.46 ஆயிரமும் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் .இரா.லலிதா இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி தலைவர் .ச.உமாமகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.உமையாள், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் .நந்தினி ஸ்ரீதர்,சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் .கமலாஜோதி தேவேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: வெங்கட் ஜெக சூர்யா , மயிலாடுதுறை

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page