8th December 2021

தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க புதிய திட்டம் : 76 லட்சம் விதைகள், ஒரு லட்சம் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு!!

சென்னை : தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022ம் ஆண்டுக்கான 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்டது போன்று வேளாண் பட்ஜெட்டும், மின் வேளாண் (இ-வேளாண்) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது பின்வருமாறு..

*டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கை ஆக்குகிறேன்.

*விவசாயிகளிடம் கருத்துக்கேட்ட பின்னரே இந்த வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.தஞ்சை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். *வேளாண் வணிகர்களின் கோரிக்கைகளையும் கேட்டபின் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கத்தோடு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட்

*உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது

*வேளாண்துறையை சவால்களில் இருந்து மீட்டெடுக்கும் தொலைநோக்கு பார்வையுடன் தனி பட்ஜெட்
உணவு தன்னிறைவைத் தமிழகம் ஓரளவிற்கு எட்டிவிட்டது. உணவுப்பாதுகாப்பையும், ஊட்டச்சத்து பாதுகாப்பையும் அடுத்து 10 வருடங்களுக்குள் அடைந்துவிட வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்

*தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காட்டை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை

*தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு

*10 லட்சம் எக்டர் பரப்பளவிலான இருபோக சாகுபடியை அடுத்த 10 வருடங்களில் 20 லட்சம் எக்டராக உயர்த்த இலக்கு

*வேளாண் தொகுப்புத் திட்டம், இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 16 அம்சங்களுடன் பட்ஜெட்

*ரூ.250 கோடியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

*கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் முதற்கட்டமாக 2500 கிராமங்களில் செயல்படுத்தப்படும்

*கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதே கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் முக்கிய அம்சம்

*கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கப்படும்

*அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போல கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிவிப்பு

*சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை விவசாயிகள் திட்டம் செயல்படுத்தப்படும்

*முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் – ரூ.146.64 கோடி செலவில் நடைபெறும்

*கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும்

*சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்

*தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பை உயர்த்த திட்டம். தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்

*தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும்

*ஊரக இளைஞர் வேளாண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

*மானாவரி நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு மானியம் வழங்கப்படும்

*அரசு விதைப்பண்ணைகள் மூலம் ரூ.25 லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படும்

*முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் – ரூ.146.64 கோடி செலவில் நடைபெறும்

*இயற்கை வேளாண்மை வளர்ச்சித்திட்டம் – ரூ.33 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்

*நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் – ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

*இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் – ரூ.2.68 கோடி ஒதுக்கீடு

*ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் – 2500 இளைஞர்களுக்கு பயிற்சி

*ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் – ரூ.5 கோடி ஒதுக்கீடு

*தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் ரூ.3 கோடி செலவில் புபனை மேம்பாடு இயக்கம்!

*76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்!’

*பனை மரத்தை வெட்டும்போது ஆட்சியரின் அனுமதி பெறுவது அவசியம்

*பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை

*நெல் ஆதரவு விலை – ஒரு குவிண்டால் சன்ன ரகத்திற்கு ரூ.70ல் இருந்து ரூ.100 ஆக உயர்வு

 

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page