8th December 2021

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவை இல்லை : தமிழக அரசு!!

சென்னை : குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவை இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 வழங்கும் திட்டம் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

‘குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தின் நோக்கம் இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதே ஆகும் என உறுதியளிக்கிறேன். எனவே இதற்காக குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை. குடும்பத்தலைவிகளுக்கான நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துவற்கான வழிமுறைகள் தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன. குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே உரிமைத் திட்டம் என்பது தவறான தகவல். குடும்பத் தலைவியாக இருந்தால் மட்டுமே உரிமைத் தொகை என்று தவறாக கருதி ரேசன் அட்டைகளில் குடும்பத் தலைவர்களை மாற்றுகின்றனர்.

இந்த நிதியுதவி திட்டத்தை பெற ரேசன் கார்டுகளில் குடும்பத் தலைவர்களை மாற்ற வேண்டியது இல்லை. இந்த திட்டம் மிகவும் ஏழ்மையானவர்களுக்கானதாகும்.குடும்பத்தலைவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பணக்காரர்களுக்கும், சம்பளம் வாங்குபவர்களுக்கும் வழங்க கூடாது என விமர்சனங்கள் எழுந்தன. ஆகவே ஏழை பெண்களுக்கு உரிமைத் தொகை சென்றடைவதை உறுதி செய்ய தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.’.

 

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page