8th December 2021

நாகையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு 24 மணிநேர மக்கள் சேவை: மாவட்ட ஆட்சியர் தகவல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு 24 மணிநேரமும் பணியாற்றும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அவசர கால மையத்தினை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரியப்படுத்தலாம். மேலும் அவசர கால மையத்தில் தரைவழி தொலைபேசி 04365-251992 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

Leave a Reply

You may have missed

You cannot copy content of this page