உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா !

தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா – குடியரசுத் தலைவர் அறிவிப்பு !

இந்தியாவின் தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.ஏ.போப்டேவின் பதவிக் காலம் வரும் 23-ம் தேதியோடு நிறைவுறுவதை அடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்.வி.ரமணா வை இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரைத்ததன் அடிப்படையில், இந்தியாவின் 48-வது தலைமை நீதிபதியாக வருகின்ற 24-ம் தேதி என்.வி.ரமணா பதவியேற்கிறார். என்.வி.ரமணா 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 26 வரை பதவியில் இருப்பார் என, குடியரசுத் தலைவரின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ரமணா கடந்த 1983-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியில் சேர்ந்தார். பல்வேறு அரசு அமைப்புகளுக்கான ஆலோசகராக பணியாற்றியுள்ளதோடு, மத்திய அரசின் கூடுதல் நிலை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். ஆந்திராவின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட என்.வி.ரமணா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கு தனி நீதி மன்றம் அமைக்கப்படும் என்ற வழக்கு, ஜம்மு காஷ்மீரில் இணைய கட்டுபாடுகளை நீக்குதல் உள்பட பல குறிப்பிடத்தக்க வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார்.

எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளின் சமீபத்திய நிலையை கண்காணிக்க உச்சநீதிமன்றத்தில் தனி பெஞ்ச் அமைக்க கோரிக்கை விடுத்தவர், என்.வி.ரமணா. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வழக்கில், தங்களை விடுதலை செய்யக் கூறி மனு தாக்கல் செய்த குற்றவாளிகளின் மனுவை தள்ளுபடி செய்தது என்.வி.ரமணா தலைமையிலான உயர்நீதி மன்ற பெஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : The Indian Express தமிழ்

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page