22nd January 2022

ஒமைக்ரான் தடுப்பு பணிகள்; உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் பரவலும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி, 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வரும் 10-ம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு களமிறங்கியுள்ளது. அதன்படி, ஒமைக்ரான் தடுப்பு பணிகள் தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறையை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page