25th September 2021

9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்… பேராசிரியர்கள் அனைத்து வேலைநாட்களிலும் கட்டாயம் கல்லூரிக்கு வருகை தருக : தமிழக அரசு

சென்னை : தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உயர்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் எடுப்பது என தமிழக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. அதேசமயம் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை உள்ளிட்டவையும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் வருகின்ற 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், ‘ தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும். அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் 9ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வருகை தர வேண்டும். பேராசிரியர்கள் அனைத்து வேலைநாட்களிலும் கட்டாயம் வருகை தர வேண்டும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்,’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page