3rd December 2021

சீர்காழியில் ஆன்லைன் வர்த்தகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆன்லைன் வர்த்தகத்தை இந்தியாவை விட்டு மத்திய அரசு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதன் தலைவர் எஸ்.பாலகுமரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விஜயக்குமார், செயலர் வேல்முருகன், பொருளாளர் உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்த ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் வணிகர்கள் ரவிச்சந்திரன், சபரிசெல்வம், ராஜ்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You cannot copy content of this page