வேளாண் கல்லூரி அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு – விவசாயிகள் திடீர் போராட்டம்!

நாகை மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கீழ்வேளூர் பகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோவிலுக்கு சொந்தமாக சுமார் 250 ஏக்கர் விளைநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புத்தர்மங்கலம் மற்றும் வடக்குவளி கிராமத்தில் உள்ள விளை நிலத்தை மாவட்ட நிர்வாகம் சார்பாக அரசு அலுவலர்கள் விவசாயிகளின் ஒப்புதலின்றி நில அளவை மற்றும் மரங்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதனை கண்ட அப்பகுதி குத்தகை விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மேலும் இப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குத்தகை தாரர்களான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டி கீழ்வேளூர் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் கல்லூரியை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் அமைக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.நாகப்பட்டினம்-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் நீடித்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page