30th November 2021

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை புத்தாக்க பயிற்சி

நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், பழையகூடலூர் ஊராட்சி சார்பில் அப்பகுதியிலுள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் “சிகரம் தொடு” என்ற தன்னம்பிக்கை புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

ஊராட்சி மன்றத்தலைவர் இரா.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்கள் அகஸ்டின் விஜய், கண்ணன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள், கிராம நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பழையகூடலூர் ஊராட்சி மன்றம் சார்பில் மாணவர்களுக்கு “ஆல் தி பெஸ்ட்” சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், பழையகூடலூர் ஊராட்சி பகுதியில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு, அவர்களின் உயர் கல்விக்கு தேவையான வழிகாட்டுதல்களும், உதவிகளும் செய்யப்படும் என பழையகூடலூர் ஊராட்சி மன்றத் தலைவர் இரா.பாண்டியன் தெரிவித்து மாணவர்களை வாழ்த்தினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பழைய கூடலூர் ஊராட்சி மன்றத்தலைவர் வழிகாட்டுதலின் பேரில் நர்வாகிகள் செய்திருந்தனர்.

 

Advertisement

Leave a Reply

You cannot copy content of this page