3rd December 2021

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக் குறைவால் காலமானார்.

பிரபல நாட்டுப்புறப் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிர் பிரிந்தது. விக்ரம் நடித்த தூள் படம் தொடங்கி இறுதியாக சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே என்ற திரைப்படம் அவர் நடித்திருக்கிறார். அவரது இறுதி ஊர்வலம் இன்று மதுரையில் அவரது உறவினர்களின் நடைபெறுகிறது

நாட்டுப்புற பாடல்களால் தமிழ்நாட்டு மக்களை உற்சாகப்படுத்திய கிராமப்புற பாடகியின் குரல் ஓய்ந்தது.அவரது இழப்பு நாட்டுப்புற கலைக்கு பேரிழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

Leave a Reply

You cannot copy content of this page