20th September 2021

“மயிலாடுதுறை பசுமை பரப்புக” அமைப்பு சார்பில் மரம் நடுவிழா

மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் “மயிலாடுதுறை பசுமை பரப்புக” அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறையில் வலைதளத்தின் மூலம் ஒத்த சிந்தனையுடைய இளைஞர்கள் ஒன்றிணைத்து “மயிலாடுதுறை பசுமை பரப்புக” என்ற அமைப்பினை உருவாக்கினர். மயிலாடுதுறை நகரையே பசுமையாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, மயிலாடுதுறை பகுதி முழுவதும் மரக்கன்றுகளை நட்டு அவை அனைத்தையும் பராமரிக்கும் முனைப்பில் முழுமையாக களம் இறங்கியிருக்கிறது.

மரம் நடுதல் மட்டுமல்லாது மரங்களை பராமரித்தல், விதைப்பந்து உருவாக்குதல், மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு அளித்தல், அழிந்து வரும் மர வகைகளை கண்டறிதல் போன்ற பல்வேறு பசுமை சார்ந்த செயல்களை செய்து வரும் இந்த அமைப்போடு சமூக ஆர்வலர்கள், காவல் அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கரம் கோர்த்து இணைந்துள்ளனர்.

“மயிலாடுதுறை பசுமை பரப்புக” அமைப்பினர் தேசிய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நட்டு அதைப் பராமரிக்க பொறுப்பாளர்களையும் நியமித்தனர். இந்த விழாவில் தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள், இளைஞர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை நகரையே பசுமையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர்களை பாராட்டி மகிழ்கிறது மயிலைகுரு.காம்.

செய்தி : குணசீலன்

வீடியோ : யோகேஷ்

Leave a Reply

You cannot copy content of this page